Monday, September 3, 2018

13-07-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 98 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
13-07-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 98
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அவளை நனைத்த மழை
அவனை நனைக்கிறது ..
அவர்களை அணைத்த மழை
தனியே நடக்கிறது ....
குடையில் குளித்தமழை
துப்பட்டாவில் ஒளிகிறது ...
கூந்தல் சரிந்த மழை
இடையில் விழிக்கிறது ...
ஜன்னல் திறக்கும் மழை
கிளையில் துளிர்க்கிறது ...
உயிரில் சிலிர்த்த மழை
கடலாய் அலைகிறது ..
துளியாய் விழுந்த மழை
கரையை உடைக்கிறது ...
மொழியில் எழுந்த மழை
காதல் கவிதை ஆகிறது ....
மழையும் மழை நிமித்தமான
எல்லாவற்றிலும்
மழைமுத்தங்களை பரிமாறிக்கொள்கிறது
மழைக்கு பிறகான வானம்
- நாகா

No comments:

neelam enbathu song