Tuesday, September 4, 2018

19-04-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 42 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
19-04-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 42
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கூழாங்கல் போட்டு
வாய் அதக்கி பேசச்சொன்ன அப்பத்தா
தாத்தாவை தவிர
எல்லோரிடமும் திக்கி திக்கிதான் பேசுவாள்..
கூடுதலான உப்பை குறைக்க
சாம்பாரில் தண்ணீர் கலந்து
ரசம்போல மொண்டு எடுக்கும்
பெரியப்பா பரமசிவம்
கடைசி காலம் வரைக்கும்
ஹெர்குலிஸ் சைக்கிளிலில் தான்
அதிகம் ஊர் சுற்றி இருக்கிறார்....
அருவியில் விழுந்த
மலை ஒன்று உள்ளங்கையில்
கூழாங்கல்லாக என்ன போல சிரிக்கும் .. ....
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
பனையோலை காத்தாடி
பூவரசம்பூவில் செஞ்ச பீப்பீ ...
சேமியா ஐஸ் நடுவுல வெச்சிருக்கும்
கருப்பு கலர் திராட்சை ..
காசு வச்ச கம்மர்கட்டு
ஒருகுடம் தண்ணி ஊத்தி
ரெண்டு கூடை பூ பறிக்கும்
கடலை காட்டு விளையாட்டு ...
எல்லாத்தையும் விட்டுட்டு தான்
இடம் மாற்றி நட்டு வைக்குது
இந்த இம்சை புடிச்ச வாழ்க்கை ...
பொன்வண்டை தீப்பெட்டிக்குள்
அடைச்சு வச்சு ரசிச்ச மனசு
சுத்தமா ரசிக்க முடையறதில்ல
பொன்வண்டா மாறிடிச்சோ நம்ம நெலமை இப்போ ...
- நாகா

No comments:

neelam enbathu song