Tuesday, September 4, 2018

06 -06-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 75 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


Image may contain: outdoor
RJ Naga
06 -06-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 75
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
விதைத்து சென்ற நிலம் யாவும்
கொத்த ஆரம்பிக்கும்
மயிலாகிறது உன் ஞாபகம் ...
நாற்றங்கால்களில் வந்தமரும்
பனித்துளிபோல
சட்டென்று ஆவியாகிறது இப்போது ..
உதிரும் இறகில் விதை நெல்லின் வாசனை
வரப்புகளில் துள்ளி குதிக்கும்
கெண்டையாகிறது மனசு ...
அச்சாணி தொலைத்த அதன் இருப்பு
ஒற்றையடிப்பாதையாக நீள்கிறது..
களத்து மேட்டின் நிழல் உலர்த்தும்
பொத்தி வைத்த பிரியங்களில்
முளைக்க ஆரம்பிக்கறது கனவுகள் ...
கழனி முழுக்க சுற்றிவந்தாலும்
களைப்பதேயில்லை உன் நினைப்பு...
தித்திக்கும் பம்புசெட்டு தண்ணீராக
நடவு காற்றில் ஈரம் அறுக்கிறது
பாத்திகளை கடந்த ஒற்றை சொல் ...
ஏதோ ஒரு கட்டாயத்தில்
முளைக்க ஆரம்பிக்கறது இப்போது
அறுவடைவரை பொறுத்துதான் ஆக வேண்டும் ...
- நாகா

No comments:

neelam enbathu song