Tuesday, September 4, 2018

18-05-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 63 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....

RJ Naga
18-05-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 63
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எங்கள் வீட்டிலும்
ஒரு கேணி இருந்தது ...
தொட்டணைத்து ஊரும்
கேணியாக இல்லை அது ...
இருந்தும் கோடை நேரங்களிலும்
தண்ணீரின் அலைவரிசையில்
ஈரம் ஒலிபரப்பும் அது ....
அரை நெல்லிக்காய் உபயத்தால்
இனிக்க ஆம்பித்தது அதன் தண்ணீர்....
ஆற்றில் பிடித்த விரால்களை
நீந்த விட்டிருந்தோம் ...
ராட்டினத்தில் தண்ணீர் சேந்தும்போது
இரும்பு பக்கெட்டில் மீன்களும் வந்துவிடும் ...
அம்மாக்களின் பயமுறுத்தலில்
தளும்ப ஆரம்பிக்கும் கேணிகள்...
எப்போதாவது உப்பு கரித்தால்
அம்மா அழுத்திருக்கிறாள் என்று அர்த்தம் ..
ஆண்டாள் அத்தை
புஜ்ஜிமாவுடன் ஒரு அகாலத்தில்
குதித்த சத்தம் பலரின் நித்திரை கலைத்தது ..
செய்யாத ஒன்றிக்கு
வேலாயுதம் மாமா குற்றவாளியாக
தூர்ந்து போனது கேணி
அவர் வாழ்க்கையை போல ....
கேணிகள் இல்லாத நகரத்தில்
விசும்பல்களுடன் யாரும்
பயமுறுத்துவதில்லை அப்பாக்களை ..
மிரட்டல்களை முன்வைத்து
தூர்ந்து போய் இருக்கலாம் கேணிகள் .....
- நாகா

No comments:

neelam enbathu song