RJ Naga
31-07-2017
திங்கள்
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 110
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு உடைந்த மூங்கில்
நுழைந்துபோன துளைவழியே
காற்றின் அடையாளம்
நீ இசையென்கிறாய்
நான் காற்றின் மொழியென்கிறேன் ..
நுழைந்துபோன துளைவழியே
காற்றின் அடையாளம்
நீ இசையென்கிறாய்
நான் காற்றின் மொழியென்கிறேன் ..
ஒரு கண்ணாடி தொட்டி
நீந்தும் மீன் வழியே
நிறத்தின் பிடிவாதம்
நீ அழகு என்கிறாய்
நான் வண்ணக் குழப்பம் என்கிறேன் ...
நீந்தும் மீன் வழியே
நிறத்தின் பிடிவாதம்
நீ அழகு என்கிறாய்
நான் வண்ணக் குழப்பம் என்கிறேன் ...
ஒரு மெழுகுவர்த்தி
எரியும் திரி வழியே
இருட்டின் கவிதை
நீ அதை நான் என்கிறாய்
நான் அதை நீ என்கிறேன் ...
எரியும் திரி வழியே
இருட்டின் கவிதை
நீ அதை நான் என்கிறாய்
நான் அதை நீ என்கிறேன் ...
ஒரு மழைமேகம்
உதிர்க்கும் துளி வழியே
கடலின் அலை
நீ நிரப்பு என்கிறாய்
நான் நிரம்ப சொல்கிறேன் ...
உதிர்க்கும் துளி வழியே
கடலின் அலை
நீ நிரப்பு என்கிறாய்
நான் நிரம்ப சொல்கிறேன் ...
ஒரு கோபுர நிழல்
போர்த்தும் நிலம் வழியே
கலசத்தின் கனவு
நீ இமைகள் திறக்கிறாய்
நான் உனக்குள் விழிக்கிறேன் ....
போர்த்தும் நிலம் வழியே
கலசத்தின் கனவு
நீ இமைகள் திறக்கிறாய்
நான் உனக்குள் விழிக்கிறேன் ....
ஒரு மொட்டைமாடி
ராத்திரி நிலா வழியே
அன்பின் கூட்டாஞ்சோறு
நீ மணிமேகலை என்கிறாய்
நான் காயசண்டிகை என்கிறேன் ....
ராத்திரி நிலா வழியே
அன்பின் கூட்டாஞ்சோறு
நீ மணிமேகலை என்கிறாய்
நான் காயசண்டிகை என்கிறேன் ....
ஒரு மயிலிறகு
பொதிந்த புத்தகம் வழியே
தோகைவிரிக்கும் காதல்
நீ நாணம் என்கிறாய்
நான் தாகம் என்கிறேன் ...
பொதிந்த புத்தகம் வழியே
தோகைவிரிக்கும் காதல்
நீ நாணம் என்கிறாய்
நான் தாகம் என்கிறேன் ...
- நாகா
No comments:
Post a Comment