Tuesday, September 4, 2018

02-03-2017 வியாழன் ஒற்றையயடி பாதை : 2 இன்றைய வானவில் இந்த கவிதையுடன் தன் வண்ணத்தை நம் நினைவு வீதியில் பூசி சென்றது ..


RJ Naga
02-03-2017
வியாழன்
ஒற்றையயடி பாதை : 2
இன்றைய வானவில் இந்த கவிதையுடன் தன் வண்ணத்தை நம் நினைவு வீதியில் பூசி சென்றது ..
குறும்பாட்டு கறிசமைச்சு
குத்தவச்சு காத்திருக்க
மத்தியான டவுன் பஸ்ஸும்
உன் வரவை பார்த்திருக்க
ஓடையில நாரையெல்லாம்
உம்பேரை சொல்லும்போது
கண்ணுபட கூடாதுன்னு
கன்னத்துல போட்டுக்கிறேன் ...
மச்சான் நீ போன இடம் மரிக்கொழுந்துக்கு தெரியல்ல
மருதாணி ஏன் செவக்கலைனு சத்தியமா புரியல...
பொள்ளாச்சி சந்தையிலே
பொழுதெல்லாம் உன்கூடதான்
கண்டாங்கி சீலைக்கும்
கனவெல்லாம் உன் மேலத்தான் ...
கைபுடிச்சு நடக்கையிலே
கைரேகை மாறிப்போச்சு
உன் தடம் பார்த்து கூடவந்து
வந்த வழி மறந்து போச்சு ....
உச்சியிலே வச்ச பூவு வாசம் விட்டு போகுதையா
நெத்தியில் உன் நெனப்பு விண்ணுவின்னு தைக்குதய்யா...
பாதகத்தி செஞ்சதென்ன
சொல்லி நீயும் போயிருந்தா
மிச்சம்மீதி உசுருக்கும்
பங்கம் வந்து சேராது ..
உனக்காக சுவாசிச்சேன்
அது உனக்கு தெரியல
நமக்காக யோசிச்சேன்
நெலமை இப்போ சரியில்ல ...
ஒத்தமாட்டு வண்டியாட்டம் தடுமாற விட்டுபுட்ட
செக்கு மாட்டு வாழ்க்கையைத்தான் தடம் மாற்றி காட்டிப்புட்ட.....
-நாகா

No comments:

neelam enbathu song