Tuesday, September 4, 2018

07-03-2017 செவ்வாய் ஒற்றையடி பாதை : 6 தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் ஒலித்த நிறைவு கவிதை ...


RJ Naga
07-03-2017
செவ்வாய்
ஒற்றையடி பாதை : 6
தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் ஒலித்த நிறைவு கவிதை ...
ஆலமரத்த சுத்தி
அடிவயத்தை பார்த்ததில்ல...
அரசமர கிளையிலே
தொட்டில் கட்டி அசைத்ததில்ல ...
சோளகதிராட்டம்
தலைசாய்த்து நானிருந்தேன்
சொக்க தங்கத்தின்
வரவுக்கு காத்திருந்தேன் ...
ஆனி பொன்போல
அசைந்து வரும் சித்திரமோ
தெப்பக்குளத்துக்குள்ள
மிதந்துவரும் வெண்ணிலவோ ...
மரப்பாச்சி பொம்மைக்கு
மயிலிறகில் சட்டை தச்சேன்
சடைபின்னி பூ முடிச்சு
கன்னத்துல பொட்டு வெச்சேன் ...
அடிவயத்தை தொட்டுப்பார்த்து
அடிக்கடி நான் சிரிச்சுக்குவேன்..
மாம்பிஞ்சு கால் உதைக்க
பொசுக்குன்னு முழிச்சுக்குவேன் ...
பல்லாங்குழி சோழியாட்டம்
நாள் கணக்க நான் ரசிக்க
கன்னங்குழியோரம்
முத்தக்கப்பல் தான் நனைக்க
கரைதட்டி கிடக்குது
தாய்மர கப்பல் ஒண்ணு ..
கொடைசாய்ஞ்சு கிடக்குது
கோபுர தீபம் ஒண்ணு ...
ரத்தமும் சதையுமா
கைகால் அசைக்கும்னு
காத்திருந்த நேரத்துல
கரைஞ்சு போனதென்ன ...
கொலுசு போட்டுக்கிட்டு
தரையெல்லாம் தாளமிட
நடைவண்டி ஒட்டிக்கிட்டு
கூடமெல்லாம் சுத்திவர
உன் பிஞ்சு விரல்பிடிச்சு
என் சுட்டுவிரல் நான் தொலைக்க
மெல்ல ஒளிஞ்சுக்கிட்டு
என் முந்தாணையை நீ இழுக்க
எல்லாம் கனவாச்சு
உன் வரவு கானல் நீராச்சு
செல்ல விதை உன்ன
கை நழுவ விட்டாச்சு ..
- நாகா

No comments:

neelam enbathu song