Tuesday, September 4, 2018

23-03-2017 வியாழன் ஒற்றையடி பாதை: 20 தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த நிறைவு கவிதை ...


RJ Naga
23-03-2017
வியாழன்
ஒற்றையடி பாதை: 20
தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த நிறைவு கவிதை ...
அத்தி ஒண்ணு பூத்ததுன்னு
அடிமனசு சொல்லுது
கோடையில வந்த மேகம்
தாழ்வாரம் நனைக்குது ...
தெருவெல்லாம் மீன்வாசம்
அவன் வந்த பின்ன வீசுது
தோட்டத்து மண் வாசம்
தாவணியை உசுப்புது ...
வருஷத்தில் பத்து நாலு
டேரா போடும் அவன் கூத்து
திண்ணையில கூடுகட்டும்
மந்தார பூ அவன் பாட்டு ...
பெண்வேடம் போட்டாலும்
அடவு கட்ட வெச்சுப்புடும் ..
எட்டுக்கட்ட தொட்டாலும்
கட்ட விரல் கோலமிடும் ...
வள்ளியா வேடம் போட்டா
குறத்தியா மனசு மாறும் ...
மீராவா வந்து நின்னா
யமுனையா உள்ளம் ஓடும் ...
சின்னதா மொட்டுவிட்ட
காதலை என்ன சொல்ல ...
உள்ளங்கை தொட்டுவந்த
ஆசைய என்ன சொல்ல .....
அவரக்கொடியாட்டம்
படர ஆரம்பிச்சேன்
அவனை நனைச்சுதான்
என்ன காயவெச்சேன் ...
நாலுவருஷம் வந்து போனான்
கூத்தாடி பையன்
மனச களைச்சு
எங்கேயோ ஓடி போனான் ...
கருவாச்சி நெனப்புக்குள்
கண்ணாமூச்சி நடக்குது
அடவு கட்டி போனதால
மணல் வீட்டை கலைக்குது ...
தினந்தோறும் உள்ளுக்குள்ள
வேடம் ஒண்ணு கட்டுறேன்
அரிதாரம் பூசும் போது
என்ன நானும் கொட்டுறேன் ...
புத்திகெட்டு போனதுக்கு
காரணத்தை தேடலை...
காதல் வந்த காரணத்தால்
படலை நானும் சாத்தலை...
- நாகா

No comments:

neelam enbathu song