RJ Naga
18-04-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 41
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எங்க வீட்டுல ஒரு கடிகாரம் இருந்தது
ஒவ்வொரு மணி நேரத்திலும்
டிங் டாங்குன்னு நல்லாவே சத்தம் போடும் ...
பெண்டுலம் போல
அசைய ஆரம்பிக்கும் எங்க வீடு...
படுக்கைக்கு ஒரு சின்ன அலாரம்
அப்பா வாங்கியாந்து வச்சார்..
மில்லுக்கு கிளம்ப ஆரம்பிக்கும் போது
எழுப்பிவிட தோதாக இருக்கும்னு அடிக்கடி சொல்வார்...
பத்தாம்வகுப்பு போனப்ப தான்
வாட்ச் கட்டவே ஆரம்பிச்சேன் ..
உச்சி வேளையை சரியா சொல்லும்
விருமாண்டி தாத்தாவுக்கு
அதெப்படி நேரம் சரியா சொல்ல தெரிஞ்சது
இன்னைக்கு வரைக்கும் புரியாத புதிர் எனக்கு ...
கூட படிச்ச பாஸ்கர் இப்போ
வாட்ச் கடை வெச்சிருப்பதா கேள்வி ...
ஒவ்வொரு கடிகாரமும்
ஒவ்வொரு கதை சொல்லும் போது
எங்க வீட்டு கடிகாரமும்
ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் ...
எப்போவாச்சும்அடகுக்கடைக்கும்
பாடம் படிக்க போயிருக்கு …
முகம் தெரியாதவங்க கூட
சிநேகமா நேரம் கேட்டு போன
காலம் கூட மாறிப்போச்சு ...
திருவிழா நேரத்தில கட்டிக்கொண்ட
வாட்ச் மிட்டாயில் தொலைந்திருந்தது
கொஞ்சம் கெட்ட நேரமும் கொஞ்சம் நல்ல நேரமும்
ஒவ்வொரு மணி நேரத்திலும்
டிங் டாங்குன்னு நல்லாவே சத்தம் போடும் ...
பெண்டுலம் போல
அசைய ஆரம்பிக்கும் எங்க வீடு...
படுக்கைக்கு ஒரு சின்ன அலாரம்
அப்பா வாங்கியாந்து வச்சார்..
மில்லுக்கு கிளம்ப ஆரம்பிக்கும் போது
எழுப்பிவிட தோதாக இருக்கும்னு அடிக்கடி சொல்வார்...
பத்தாம்வகுப்பு போனப்ப தான்
வாட்ச் கட்டவே ஆரம்பிச்சேன் ..
உச்சி வேளையை சரியா சொல்லும்
விருமாண்டி தாத்தாவுக்கு
அதெப்படி நேரம் சரியா சொல்ல தெரிஞ்சது
இன்னைக்கு வரைக்கும் புரியாத புதிர் எனக்கு ...
கூட படிச்ச பாஸ்கர் இப்போ
வாட்ச் கடை வெச்சிருப்பதா கேள்வி ...
ஒவ்வொரு கடிகாரமும்
ஒவ்வொரு கதை சொல்லும் போது
எங்க வீட்டு கடிகாரமும்
ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் ...
எப்போவாச்சும்அடகுக்கடைக்கும்
பாடம் படிக்க போயிருக்கு …
முகம் தெரியாதவங்க கூட
சிநேகமா நேரம் கேட்டு போன
காலம் கூட மாறிப்போச்சு ...
திருவிழா நேரத்தில கட்டிக்கொண்ட
வாட்ச் மிட்டாயில் தொலைந்திருந்தது
கொஞ்சம் கெட்ட நேரமும் கொஞ்சம் நல்ல நேரமும்
- நாகா
No comments:
Post a Comment