Tuesday, September 4, 2018

20-06-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 84 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
20-06-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 84
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அதென்னவோ மருதாணி மீது
அப்படி ஒரு பிரியம் ...
மருதாணி அரைப்பதில்
அப்பத்தா திறமைசாலி...
பச்சையம் சிவக்கும் ரகசியத்தில்
தொலையும் என் இளமை ...
எனக்கு பிடிக்கும் என்பதற்காக
அவன் கொண்டுவந்து கொடுத்த கிளை
வளர ஆரம்பித்தது மெல்ல மெல்ல ..
இளைப்பறிக்கும் என் தனிமையில்
பூப்பூக்க ஆரம்பித்தது ..
தொப்பி வைத்த விரல்கள் சிவக்கும்
உள்ளங்கை ரேகையங்கும்
அவன் நினைவுகள் ஓடும் ...
ஒருநாள் மருதாணிமரத்தை
வெட்ட வேண்டி வந்தது ..
நிழல் வியாபித்த மரத்தின் அடியில்
ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பாக
நகர்கிறது காலம் ...
என்னதான் நகரங்களில் உடனடியாக
மருதாணி வாங்கி வைத்துக்கொண்டாலும்
சிவந்து விடும் கண்களுக்கு தெரிவதே இல்லை
நினைவுகளின் நிறம் சிவப்பு என்று ...
- நாகா

No comments:

neelam enbathu song