RJ Naga
27-06-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 88
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
தறி சத்தத்தில்
நித்திரை தொலைக்கும் எங்கள் வீடுகள்...
வேப்பமர நிழலில் சாயம் தோய்ந்த வெயில்
உலர்ந்துகொண்டிருக்கும் ...
நூல்களின் இணைப்பில்
ஆடைகளாகும் எங்கள் வாழ்க்கை ...
அப்பாவிற்கு புடவையும் வேட்டியும்
கைவந்த கலை..
தீப்பெட்டிக்கூட கடன்வாங்க தயங்கிய
குடும்பத்தில் முதன்முறையாக
எட்டிப்பார்த்தது சிம்னி வெளிச்சம் ...
பண்டிகைளில் பவுடர் பூசும் புன்னகை
கூரை உரசும் சுவர்களை போல
வெடிப்புகளில் துளிர்க்க ஆரம்பித்தது. ..
மின்சார தறி வரவால்
நெய்தலானது எங்கள் முல்லையும் மருதமும் ...
விற்பனைக்கு தயாராகும் எங்கள்
உடைகளில் ஆரம்பமானது
வசம் இழந்துபோன தொழில் ..
நூல் நூற்ற ராட்டைகளில்
பாவம் சிலந்திகள் ..
அப்பாவின் கருணையில் விட்டுவிடுதலையானது
எங்களை போல அதுவும் ...
ஒன்றை விற்று ஒன்றை பெறும் நிலையில்
சொல்லிக்கொள்கிறோம்
" செய்யும் தொழிலே தெய்வம் "
நித்திரை தொலைக்கும் எங்கள் வீடுகள்...
வேப்பமர நிழலில் சாயம் தோய்ந்த வெயில்
உலர்ந்துகொண்டிருக்கும் ...
நூல்களின் இணைப்பில்
ஆடைகளாகும் எங்கள் வாழ்க்கை ...
அப்பாவிற்கு புடவையும் வேட்டியும்
கைவந்த கலை..
தீப்பெட்டிக்கூட கடன்வாங்க தயங்கிய
குடும்பத்தில் முதன்முறையாக
எட்டிப்பார்த்தது சிம்னி வெளிச்சம் ...
பண்டிகைளில் பவுடர் பூசும் புன்னகை
கூரை உரசும் சுவர்களை போல
வெடிப்புகளில் துளிர்க்க ஆரம்பித்தது. ..
மின்சார தறி வரவால்
நெய்தலானது எங்கள் முல்லையும் மருதமும் ...
விற்பனைக்கு தயாராகும் எங்கள்
உடைகளில் ஆரம்பமானது
வசம் இழந்துபோன தொழில் ..
நூல் நூற்ற ராட்டைகளில்
பாவம் சிலந்திகள் ..
அப்பாவின் கருணையில் விட்டுவிடுதலையானது
எங்களை போல அதுவும் ...
ஒன்றை விற்று ஒன்றை பெறும் நிலையில்
சொல்லிக்கொள்கிறோம்
" செய்யும் தொழிலே தெய்வம் "
- நாகா
No comments:
Post a Comment