Tuesday, September 4, 2018

10-04-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 34 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
10-04-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 34
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
மேய்ச்சலுக்கு போன இடம்
சுள்ளி பொறுக்க நின்ன இடம்
திட்டு திட்டா நீலவானம்
நிலத்தை தொட்டு ரசிச்ச இடம் ...
வெட்டுக்கிளி வெட்கப்பட்ட
பனி சுமக்கும் பச்சை புல்லு
தட்டானின் சிறகு தொட்டு
முத்தமிட்ட ஈர காத்து ...
துள்ளிக்குதித்து ஓடும்
வெள்ளை முயலு கூட்டம் ...
ஓடும் ஓடையில
மிதக்கும் தாழம்பூ வாசம் ...
முட்டி மோதிச்செல்லும்
மேக துண்டு ஒண்ணை
வெட்டி எடுத்துவர
உச்சி ஏறி போவேன்....
ஒத்த பாதையிலே
ஆணை கூட்டம் வரும்
சிங்கம் சத்தம் போட்ட
பயத்தை காற்றுத்தரும் ..
காட்டுப்பூவுக்கெல்லாம்
பேரு வச்சவன
ஒத்த கிளையில
தொங்க வச்சிருப்பேன் ...
ஊரு ஒட்டித்தான்
அப்போ காடு இருந்தது ...
ஊரு பெருசாக
காடு சிறுசாச்சு ...
தண்ணிகுடிக்கத்தான்
ஊருக்குள்ள குடியேறும்
வாழ தோப்புக்குள்ள
பசிக்காக பழம்பறிக்கும்...
வனம் தொலைத்த காரணம்
வகையாக தெரிஞ்சிருந்தும்
கிளைதாவும் குரங்காக
மாறிப்போச்சு அத்தனையும் ...
விதைக்குள்ள மரம் இல்ல
மரமெல்லாம் வனமில்ல
வனத்துக்குள் புகும் ஊர
விரட்ட ஒரு ஜீவன் இல்ல....
- நாகா

No comments:

neelam enbathu song