Tuesday, September 4, 2018

28-05-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 69 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
28-05-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 69
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஏதோ ஒரு வாசத்தில் தொலைய
அடம்பிடிக்கிறது மனசு ..
காலையில் மகிழம்பூ வாசத்தில்
இஞ்சி டீ குடிக்கும் வீட்டுக்குள் இருந்து
கண் விழிக்கிறது எனக்கான கவிதைகள் ...
மல்லிகை பூக்களை பறித்து
பூத்தொடுக்கும் அதன் வார்த்தைகள்
பீர்க்கம்பூ வாசத்தில்
துவையல் அரைக்க ஆரம்பிக்கும் ...
ஊரெல்லாம் வெயில் சுமந்து
வேப்பம்பூக்களின் வாசத்தில்
கிறுகிறுத்து நிற்கும் அதன் ஓட்டம் ...
அரவமாய் மாறி தாழம்பூ காட்டுக்குள்
தனித்து அலைய ஆரம்பிக்கும்
மண் வாசனையில் மழை வாசம் நுகரும் ....
அதன் இருப்பில் அடிக்கடி
வாடா மல்லி பூக்களுக்கருகில்
பீப்பீ ஊத ஆரம்பிக்கும் டிசம்பர் பூக்கள் ...
நிலம் நனையும் நேரங்களில்
காற்றில் கரையும் பூவரசம் பூக்களில்
வந்தமர்ந்து போகும் பட்டாம்பூச்சிகளை
வானவில்களாக வரைய ஆரம்பிக்கும் ...
வாசங்களின் நிழலில் வந்தமர்ந்துபோகும்
அவளிடம் இருந்து தொடங்கலாம்
வார்த்தைகள் இல்லாத ஆக சிறந்த கவிதை ...
- நாகா

No comments:

neelam enbathu song