RJ Naga
04 -06-2017
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 74
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
தொண்டை குழிக்குள்
சிக்கிக்கொண்ட மீன் முள்ளாக
நீயும் நீயுமான உன் நினைவுகளும்
நானும் நானுமான என் கனவுகளும் ..
ஒற்றை கவளத்தில் இறங்க மறுக்கும்
ஒட்டுமொத்த அடாவடித்தனத்தில்
சண்டி செய்கிறது என்னிடம் தினமும் ...
பெரும்பாலான என் இரவுகள்
உப்பு காற்றை விநியோகம் செய்யும் நேரங்களில்
ஆவியாகிறது உன் தனிமை ..
கரையொதுங்கும் ஆற்றின் முதுகில்
சவாரி செய்யும் பரிசலாகிறது
நமக்குள் பரிமாறிக்கொள்ளும் பிரேமம் ...
பூக்கொய்த விரல்களை அலசும் தண்ணீரில்
தோட்டத்தின் பிம்பம் எட்டி பார்த்து
கூட்டிப்போகிறது நம்மை ...
குடுவைக்குள் இறங்கி பத்திரப்படும் மேகம்
தாகத்தை தேடி நகர்கிறது மெதுவாய் ..
களிமண்ணுக்குள் சிறைப்படும்
மின்மினிகளின் கந்தர்வ காதல்
இருட்டை போர்த்திக்கொள்கிறது பயமில்லாமல் ..
யாருமற்ற பொழுதில் வீசிச்செல்லும்
அதன் தூண்டில் முள்ளில்
இப்போது சிக்கிக்கொள்கிறோம்
முதல்முறையாக நீயும் நானும் ...
சிக்கிக்கொண்ட மீன் முள்ளாக
நீயும் நீயுமான உன் நினைவுகளும்
நானும் நானுமான என் கனவுகளும் ..
ஒற்றை கவளத்தில் இறங்க மறுக்கும்
ஒட்டுமொத்த அடாவடித்தனத்தில்
சண்டி செய்கிறது என்னிடம் தினமும் ...
பெரும்பாலான என் இரவுகள்
உப்பு காற்றை விநியோகம் செய்யும் நேரங்களில்
ஆவியாகிறது உன் தனிமை ..
கரையொதுங்கும் ஆற்றின் முதுகில்
சவாரி செய்யும் பரிசலாகிறது
நமக்குள் பரிமாறிக்கொள்ளும் பிரேமம் ...
பூக்கொய்த விரல்களை அலசும் தண்ணீரில்
தோட்டத்தின் பிம்பம் எட்டி பார்த்து
கூட்டிப்போகிறது நம்மை ...
குடுவைக்குள் இறங்கி பத்திரப்படும் மேகம்
தாகத்தை தேடி நகர்கிறது மெதுவாய் ..
களிமண்ணுக்குள் சிறைப்படும்
மின்மினிகளின் கந்தர்வ காதல்
இருட்டை போர்த்திக்கொள்கிறது பயமில்லாமல் ..
யாருமற்ற பொழுதில் வீசிச்செல்லும்
அதன் தூண்டில் முள்ளில்
இப்போது சிக்கிக்கொள்கிறோம்
முதல்முறையாக நீயும் நானும் ...
- நாகா
No comments:
Post a Comment