Monday, September 3, 2018

11-07-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 96 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
11-07-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 96
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
தொலைக்க விரும்பி
அடையாளம் தெரியாத இடத்தில்
விட்டு வந்திருந்தோம் ஜிம்மியை ...
எப்படியோ கண்டடைந்துவிட்டது வீட்டை
முதல் முறையாக குடும்பமே
தொலைந்தது அப்போது தான் ...
யாருமற்ற தனிமையை
அழகுப்படுத்துகிறது தொலைதல் ..
கூட்டை தொலைத்த பட்டாம்பூச்சியின்
பறத்தலில் தொலைந்திருந்தது
தோட்டத்தின் வாசனை ....
சின்னதாகி போன உடைகளில்
தொலைந்திருந்த வயதுகளை
உடுத்திக்கொண்டிருந்தது நினைவு ...
அகாலத்தில் காணாமல் போன
அப்பாவின் சைக்கிள் ..
தொலைந்து போனதாய் தேடி
கடைசியில் கண்டடைந்த
அக்காவின் கால்கொலுசு ...
களவு போனதை நம்ம மறுக்கும்
அப்பத்தாவின் காத்திருப்பு .....
- இன்னபிறவற்றிலும்
தொலைந்தும் தொலையாமலும்
இருக்கவே செய்கின்றன
தொலைதல் குறித்தான நம்பிக்கைகள்...
கண்டடைவதில் ஆரம்பமாகலாம்
பெருங் கூட்டத்தில் தொலைந்தவனின்
வார்த்தைகளற்ற தனிமை….
- நாகா

No comments:

neelam enbathu song