Tuesday, September 4, 2018

02-04-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 29 தமிழ் 89.4 பண்பலை நமது வானவில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
02-04-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 29
தமிழ் 89.4 பண்பலை நமது வானவில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஜூலிக்கு நான்னா
ரொம்ப பிரியம் ....
என் விரல் பிடித்துக்கொண்டு
அமர்ந்திருப்பதில் அத்தனை ஆனந்தம் ...
அவள் உலகம் என்னால்
உருவாக்கப்படுவதாய் சிலாகித்து கொள்வாள் ...
என்னுடன் சாப்பிட
சிநேகம் காட்டும் அவள் வாஞ்சையில்
என் திசையெங்கும்
விண்மீன்களின் கண்ணாமூச்சி
ஆரம்பித்து இருக்கும் ...
என் வழித்துணைகளில்
ஜூலியின் சிறகசைப்புகள் ..
என் ராத்திரிகளில்
ஜூலியின் தனிமைகள்...
ஜூலி இல்லாத பொழுதுகளில்
நான் தொலைந்துவிடுவேனோ
தடுமாறுகையில் குரல்கொடுத்து
விழிக்க வைப்பாள்...
கூண்டுக்குள் பரந்த ஆகாயத்தை
ரசிக்க பழகி இருந்தாள் ...
ஜூலியும் நானுமான நாட்களை
எப்போதாவது வந்து போகும்
பெயர் தெரியாத அந்த பறவை
இறகு உதிர்த்து ஞாபகப்படுத்தி போகும் ...
ஜூலியின் பயத்தை ரசிக்க ஆரம்பிக்கும்
லூசியின் வருகை ..
பறத்தல் ஜூலியின் அழகு
ரசித்தல் லூசியின் அழகு .....
ஜூலி என்றொரு பச்சை கிளி
ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் இருந்தது
லூசி என்றொரு பூனை
வீட்டில் புழங்க தொடங்குவதற்கு முன்வரை .....
- நாகா

No comments:

neelam enbathu song