RJ Naga
02-04-2017
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை
ஒற்றையடிப்பாதை : 28
தமிழ் 89.4 பண்பலை நமது " வானவில் " நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
களத்துமேட்டுல
வெள்ளாமைக்கு முன்னால
சந்தைக்கு போறப்ப
மிளகா பஜ்ஜி வாங்கறதுக்கு முன்னால
டவுன் பஸ்ஸுல
ஜன்னல் சீட் பிடிக்கறதுக்கு முன்னால
பத்தாயத்துல
கம்பங்கதிர கொட்டறதுக்கு முன்னால
கருக்கருவா
சாணை தீட்டறதுக்கு முன்னால ...
ரெட்டைஜடையில
ஊதா ரிப்பன் கட்டறதுக்கு முன்னால
பெட்ரோமேக்ஸ்ல
வெளிச்சம் வர்ரதுக்கு முன்னால
பொட்டல் காட்டுல
ஒற்றை துளி விழறதுக்கு முன்னால
செம்புல பெயல் நீர் போல
எல்லாம் ஒழுங்காதான் இருந்தது ...
தட்டானை புடிக்க போய்
கருவமுள்ளில் குத்திகிட்டேன்
சவுக்கு தோப்புக்குள்ள
பச்சை கிளியா மாட்டிகிட்டேன் ..
பூதம் வரும்னு நெனச்சு
விளக்க தேய்க்க போய்
பூதம் தூக்கி போன கதையா போச்சு ...
பதுமைகளை பதில் சொல்ல வச்சு
வேதாளம் முதுகில்
சவாரிசெய்ய ஆரம்பிக்கும் விக்கிரமாதித்தனா
மாறிப்போகுது நம்ம நெலமை ...
வெள்ளாமைக்கு முன்னால
சந்தைக்கு போறப்ப
மிளகா பஜ்ஜி வாங்கறதுக்கு முன்னால
டவுன் பஸ்ஸுல
ஜன்னல் சீட் பிடிக்கறதுக்கு முன்னால
பத்தாயத்துல
கம்பங்கதிர கொட்டறதுக்கு முன்னால
கருக்கருவா
சாணை தீட்டறதுக்கு முன்னால ...
ரெட்டைஜடையில
ஊதா ரிப்பன் கட்டறதுக்கு முன்னால
பெட்ரோமேக்ஸ்ல
வெளிச்சம் வர்ரதுக்கு முன்னால
பொட்டல் காட்டுல
ஒற்றை துளி விழறதுக்கு முன்னால
செம்புல பெயல் நீர் போல
எல்லாம் ஒழுங்காதான் இருந்தது ...
தட்டானை புடிக்க போய்
கருவமுள்ளில் குத்திகிட்டேன்
சவுக்கு தோப்புக்குள்ள
பச்சை கிளியா மாட்டிகிட்டேன் ..
பூதம் வரும்னு நெனச்சு
விளக்க தேய்க்க போய்
பூதம் தூக்கி போன கதையா போச்சு ...
பதுமைகளை பதில் சொல்ல வச்சு
வேதாளம் முதுகில்
சவாரிசெய்ய ஆரம்பிக்கும் விக்கிரமாதித்தனா
மாறிப்போகுது நம்ம நெலமை ...
- நாகா
No comments:
Post a Comment