Monday, September 3, 2018

12-07-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 97 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
12-07-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 97
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
புலம் பெயர்கிறேன் ஒவ்வொருமுறையும்
இடம் விட்டு இடம் தேடி நாடோடியாகிறது நிகழ் ...
முல்லை குறிஞ்சியாக நெய்தல் பாலையாக
ஏதோ இடம்பெயர்தலை அர்த்தப்படுத்துகிறது மருதம் ..
பழகிய சாலைகளை அந்நியப்படுத்தி
புதிய சாலைகளில் அந்நியனாய் நுழைகிறது மனசு ...
வேண்டியவைகளை சிலநேரம் உதறி
சிதறியவைகளை பல நேரம் சேகரித்து
நினைவை பத்திரப்படுத்தும் ஊழிக்கூத்தில்
அடவு கட்டுகிறது வாழ்க்கை ...
கதவு ஜன்னல் முற்றம் தாழ்வாரம் கடந்து
தாழ் திறக்கும் காற்றின் கரங்களில்
பூட்டை திறக்கும் சாவிகள் ....
எந்த பூட்டு எந்த சாவி கண்டுபிடிப்பில்
கரைகிறது குடிப்புகும் பொழுதுகள்...
உருகும் மெழுவர்த்தியின் வெளிச்சம்
காட்டி செல்கிறது மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஒரு ராத்திரி ..
நிழல்களாய் அசையும் எதிலும்
தென்பட்டதில்லை நிலவின் நிழல் ...
ஒட்டடை படிந்த பழையபுகைப்படத்தில்
இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது
நேற்றுவரை வசித்த வீட்டின் ஊஞ்சல் ....
யாரோ அசைத்து செல்கிறார்கள்
ஒருவேளை நாளையும் இடம்பெயராலாம் நான்
இதே நினைவை சுமந்தபடி இன்னொரு இடத்திற்கு ....
- நாகா

No comments:

neelam enbathu song