Tuesday, September 4, 2018

24-04-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 45 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
24-04-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 45
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
வாலாட்டும் நாய்க்குட்டியை போல
அவன் பின்னாலேயே செல்கிறது மனசு ..
நான்கு எட்டு பதினாறு முப்பத்தி ரெண்டாக
கிழித்து பறக்கவிட்டாகிவிட்டது மனதை
முள் செடியில் அமர்ந்து போகும் தட்டானை போல
தாழ பறக்கிறது விரல் பிடிக்கும் அவகாசம் கொடுத்து .... ..
கொட்டாங்குச்சியில் மண்ணள்ளி குமித்து
இட்லி சுடும் பாவாடை சட்டை வயது
கடற்கரையில் நண்டு பிடித்துக் கொண்டிருந்தது ...
ஈரத்தில் பதிந்த காலடி சுவட்டில்
கொலுசு உரச நடந்து போகிறேன் ...
தொடுவானத்தின் விளிம்பில் இருந்து
அவன் கண்சிமிட்டுகிறான் கை அசைக்கிறான் ...
வேண்டாம் என்று விலகி வந்தாலும்
தலையணை நனைக்கவைத்து
தலைகோதும் விரலால் விழி துடைக்கிறான் ...
ஒரு மதயானையாக உள் நுழைந்து
பூனை குட்டியாய் மாறும் அதிசயம் ரசிக்கிறேன் ..
என்னை அவனாக மாற்றும் ரசவாதத்தில்
உடைந்து போகிறேன் கண்ணாடி சில்லுகளாய்....
அடங்க மறுக்கும் தாகம் பருக மறுக்கிறது
அடங்கி போகும் நிழலில் படுத்துக்கொள்கிறது வெயில் ..
பெயர்சொல்லி கூப்பிட்டு திரும்ப வைத்து
காணாமல் போவதே வாடிக்கையாக இருக்கும்
அவனுடன்தான் தொலையவேண்டும்
மீதம் இருக்கும் வாழ்க்கையை ...
- நாகா

No comments:

neelam enbathu song