Tuesday, September 4, 2018

17-05-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 62 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
17-05-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 62
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
முதன்முறையாக
தோட்டத்தில் பூ வளர்க்க
ஆசைப்பட்டது எங்கள் வீடு ...
டிசம்பர் பூக்களில் ஆசையில்லை
சூரியகாந்திகளை வளர்க்க இடம் போதாது..
வீட்டின் முன் பக்கத்தில் பூக்கும்
செம்பருத்திப்பூக்களை பறித்து சூடிக்கொள்ள
விரல்கள் நீண்டதில்லை ...
வெள்ளை நிறங்களின் மேல் கொள்ளை பிரியம்
மல்லி வளர்ப்பதென்று முடிவு செய்தோம் ...
அப்போதுதான் பெரியசாமி பெரியப்பா
கேட்டது ஞாபகம் வந்தது ...
பழமல்லியா ஜாதிமல்லியா
குண்டுமல்லியா அடுக்கு மல்லியா...
வெள்ளையாக இருப்பதெல்லாம் மல்லியாகாது
அப்போது தான் புரிந்துகொண்டேன் முதல் முறையாக ..
பதியன் போட்ட பிறகு
காலையில் தம்பியும் மாலையில் நானுமாக
தண்ணீர் ஊற்றுவதென்று
முறைவைத்துக்கொண்டோம் ...
ஆடுமேயாமல் சர்வ ஜாக்கிரதையாக
வளர ஆரம்பித்தது எங்கள் வீட்டு மல்லிச்செடி ..
கிளுவை மரம் சுற்றி படரும் அதன் கொடியில்
பூக்க ஆரம்பித்தது பூக்கள் ...
மாலையில் மலரும் பூவின் வாசத்தில்
ததும்பி வழிந்தது வீடு...
ரெட்டை ஜடையோ ஒற்றை பின்னாலோ
பூவில்லாமல் போனதில்லை நான் ...
இப்போது பறிக்க ஆரம்பிக்கிறது
ஓவ்வொரு பூவாக உதிரஆரம்பிக்கும் நாட்களை ...
- நாகா

No comments:

neelam enbathu song