Tuesday, September 4, 2018

30-05-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 71 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
30-05-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 71
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
சிதறும் வண்ணங்களாக
எனக்குள் படர்ந்து செல்கிறது
ஒரு மழை ஓவியம் ...
திட்டு திட்டாய் நனையும் அதன் இருப்பில்
இழந்து கொண்டிருக்கிறேன் மெதுவாக என்னை ...
குதித்து விளையாடும் குழந்தைகளாக
சலங்கை கட்டும் அதன் அரங்கேற்றம்
விளிம்புகளை மீறாமல் கரைகிறது
காலாதீத இடைவெளியில்.....
நிறங்களின் கோரப்பிடியில்
பாலையென பரவும் பயணம்
தனித்து அலைகிறது நிறஒவ்வாமையால் ..
நிரம்பி இருந்த அதன் முழுமையில்
உதிர்ந்து கொண்டிருந்தது
தேடலை முன்வைக்காத
வண்ணத்தில் சிக்கிய ஓவியம் ...
- நாகா

No comments:

neelam enbathu song