RJ Naga
08-08-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 115
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு பூ சுமந்துகொண்டு பயணிக்கிறது நதி
அதன் கரை இரண்டிலும் பூவின் வாசம் ...
ஏதோ ஒரு தோட்டத்தில் இருந்து
பூத்ததாய் இருந்திருக்கவேண்டும் அந்த பூ
கூந்தலில் இருந்து உதிர்த்திருக்க வாய்ப்பில்லை ...
எந்த விரல் பறித்து எந்த விரல் தொடுத்ததோ
நசுங்கிய காம்பில் யாரோ ஒருவரின் ஆயுள் ரேகை ...
மரம் தழுவி சென்ற நதியில்
பிடி நழுவிய கிளையில் இருந்து
காதலுடன் விழுந்திருக்கலாம் ஒருவேளை அந்த மலர்...
அது மலர் தான் என்பதில் நதிக்கும்
அது நதிதான் என்பதில் பூவுக்கும்
சந்தேகங்கள் பூத்திருக்கலாம் ...
அலையெழும்பாத சீரான வேகம் இழுத்து செல்கிறது
பூ என்கிற ஒன்றை நதி என்கிற ஒன்று .....
அதன் கரை இரண்டிலும் பூவின் வாசம் ...
ஏதோ ஒரு தோட்டத்தில் இருந்து
பூத்ததாய் இருந்திருக்கவேண்டும் அந்த பூ
கூந்தலில் இருந்து உதிர்த்திருக்க வாய்ப்பில்லை ...
எந்த விரல் பறித்து எந்த விரல் தொடுத்ததோ
நசுங்கிய காம்பில் யாரோ ஒருவரின் ஆயுள் ரேகை ...
மரம் தழுவி சென்ற நதியில்
பிடி நழுவிய கிளையில் இருந்து
காதலுடன் விழுந்திருக்கலாம் ஒருவேளை அந்த மலர்...
அது மலர் தான் என்பதில் நதிக்கும்
அது நதிதான் என்பதில் பூவுக்கும்
சந்தேகங்கள் பூத்திருக்கலாம் ...
அலையெழும்பாத சீரான வேகம் இழுத்து செல்கிறது
பூ என்கிற ஒன்றை நதி என்கிற ஒன்று .....
- நாகா
No comments:
Post a Comment