Monday, September 3, 2018

09-08-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 116 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
09-08-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 116
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
வயதாகி கொண்டிருப்பதாக
சொல்லிச்செல்கிறது
ரசம் உதிரும் நிலைக்கண்ணாடி ...
மீசையில் இரண்டொரு முடிகள்
நரைக்க ஆரம்பித்துவிட்டது ...
பிடுங்க விருப்பமில்லை
அப்படியே விடவும் பிரியமில்லை....
வெளுக்க தொடங்கும் தலைமுடியில்
தொலைய தொடங்குகிறது இளமை ...
மைபூசி மறைக்க முனையாத
இருண்மையை ஆக்ரமிக்கிறது நேற்று ...
அண்மை தொலைவிலும் தூரம் அருகிலுமாக
மாயத்தோற்றத்தில் மூழ்குகிறது நிகழ் ..
வெள்ளெழுத்துகளில் மிதக்கிறது
நாற்பதுகளின் தொடக்கம் ...
சுருக்கங்களில் சட்டையும் முன்நெற்றியும்
எட்டிப்பார்க்கும் தொப்பையுமாக
....ஒரு வேலை வயதுதான் ஆகிவிட்டதோ...
பூமராங் வார்த்தைகளை
சொல்லிப்பார்க்கிறது மனது ...
கருப்புவெள்ளை புகைப்படங்களைப்போல
ஆவணப்படுத்துகிறது காலம் ...
"அந்த காலத்துல " சொல்ல ஆரம்பித்துவிட்டேன்
நானும் இப்போது ...
- நாகா

No comments:

neelam enbathu song