Monday, September 3, 2018

10-08-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 117 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
10-08-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 117
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு விடுமுறை நாளை
ஏகப்பட்ட திட்டமிடலுடன்
தயாரிக்க ஆரம்பிக்கிறேன் ...
தூக்குதண்டனை கைதியைப்போல
வாழ்ந்து பார்க்கும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது ....
ரசித்து ருசித்து கீழே வைக்கும்
காலி கோப்பைகளை போல
நிரம்பிய பானங்களுடன் ஆயத்தமாகிறேன் ..
என்னை உதறி மடித்து வைக்கும் படுக்கையும்
கொடிக்கம்பிகளில் தொங்கும் உள்ளாடையும்
காட்டிக்கொண்டதில்லை ஒரு நாளின் ஓய்வை ...
இரவில் அறையெங்கும் சிதறும் வார்த்தைகள்
சுவர் மோதி செத்து கிடக்கின்றன காலையில்...
கவனமாக கடத்த வேண்டும் போல
யாருமற்ற இரவில் தனிமையில் பேசுபவனின்
சொற்கள் சேகரிக்கப்படலாம்
விடுமுறையின் பகல்பொழுதில் பந்திவைக்க ..
- நாகா

No comments:

neelam enbathu song