Tuesday, September 4, 2018

16-04-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 39 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
16-04-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 39
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கேப்பைக்களி நெனப்பு வந்து
தொண்டைக்குழி விக்குது
சீம்பாலின் வாசத்தில
பொற கதவு திறக்குது ..
ஈசானி மூலையில
பல்லி ஒண்ணு கத்துது ...
கதவிடுக்கில் மாட்டிக்கிட்ட
வால் போல துடிக்குது ,....
திரி தீண்டி போனவனை திசையெங்கும் தேடுறேன்
இமை நனைக்கும் கனவுகளை பூப்போல தொடுக்குறேன் ...
மழை பெய்ஞ்ச நேரத்தில
பொசுக்குன்னு காளானா பூக்குது
கிளை தூவும் துளியாக
தாழ்வாரம் நனைக்குது ..
திண்ணையில தூங்கும்
பூனைக்குட்டியா ஆச்சு
மனசுக்கு சலங்கை கட்ட
எலி புடிக்க போச்சு ....
செவ்வரளி தேன்துளியா சிக்கிக்கிச்சு மனசு
நடைவண்டி ஒட்டிக் கிட்டு எங்கேயோ போச்சு ..

சீனி மிட்டாயில
ஊரும் எறும்பாட்டம்
வேப்பம் பழத்துல
உட்காரும் வெயிலாட்டம் ..
பச்சை நிற காகம் ஒண்ணு
வாசல் வந்து கத்துது ...
கருப்பு நிற போர்வையில
கிளியொன்னு கோவைப்பழம் கேட்குது..
ஒட்டாத ஓட்டுக்குள்ளே புளியம்பழம் போயிருக்கான்
பிஞ்சு போன செருப்பாட்டம் விட்டு விலக காத்திருக்கான் ...
- நாகா

No comments:

neelam enbathu song