Monday, September 3, 2018

செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 92 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


Raman Nagappan shared a photo.
July 4, 2017
RJ Naga
04-07-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 92
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அழைப்பிதழ்களை சுமந்தபடி
காத்திருக்கலாம் திருமண மண்டபங்கள்...
ஆணியில் சிக்கிக்கொண்ட பட்டுப்படவையின்
உதிரும் இழையாக சில நேசங்களை
பொத்திவைத்து மூச்சிரைக்கலாம் அது ...
ஒவ்வொருமுறையும் கூட்டுப்புழுவாகிற
வண்ணத்துப்பூச்சியின் முயற்சிகள்
வாசல் பார்த்தே அடங்கிவிடுகிறது ....
வருவதற்கான சாத்தியங்கள் இருந்தும்
வெறுமையை சந்தித்தே
விடைபெறுகிறது சில புறப்பாடுகள்...
இமை கசியும் பொழுதுகளில்
நனையும் பிம்பங்களாக தென்படும்
ரெட்டைஜடை காதல் திருமதிகளாகி
வலம்வரவே செய்கிறது அட்சதைகள் தூவி..
இடுப்பில் சுமக்கும் காதலை
கன்னம் கிள்ளி முத்தமிடும் சம்யுக்தைகளிடம்
கேட்டு தெரிந்துகொள்ளலாம்
பிருத்திவிராஜர்களின் காதல் நிவந்தங்களை...
யார் யாரோ நலம் விசாரித்து செல்ல
கேட்க வேண்டியவர்களை தேடி காத்திருக்கிறது
நலன்களை சுமக்கும் இதயங்கள்...
- நாகா

No comments:

neelam enbathu song