Tuesday, September 4, 2018

12-05-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 59 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
12-05-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 59
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஊரெல்லாம் திருநாளு
ஆத்தா உனக்கேது ஒரு நாளு
கத்தாழை காட்டுக்குள்ள
முள் குத்தி கெடக்குதே உன் வரலாறு ...
மூக்கணாங் கயிருக்குள்ள
ஆத்தா உன் மூச்சு காத்து ஒளிஞ்சிருக்கு
எரவான ஓரத்துல ஆத்தா உன் நெனப்பு
ஈரம் பட்டு நனஞ்சிருக்கு ...
கருக்கலில் கண்முழிப்ப
கந்த கிடங்கில் பூவளர்ப்ப
தீப்பெட்டிக்குள்ள பொன்வண்டா
என்ன பொத்தி பொத்தி தான் வளர்ப்ப..
கந்தலில் கனவு தூங்கும்
கிழிச்சலில் கவிதையாகும்
சாயம் போவதற்குள் ஆத்தா நீ சுமந்த
நடவண்டி என்ன வாகும் ..
உனக்கு எது பிடிக்கும்
வாய்த்தொறந்து கேட்டதில்லை
வாங்கித்தர ஆசைப்பட்டும்
ஆத்தா நீ எதிர்பார்த்ததில்ல ...
எனக்கு புடிக்கும்னு
கறிசமைச்சு காத்திருப்ப
நான் அத்தனையும் சாப்பிட
இமைக்காம நீ ரசிப்ப.....
கரையேறும் தோணியாட்டம்
காத்திருக்கு உன் நேசம்
பாய்மர படகாட்டம் ஆத்தா
உன் நெனப்புல அது தெசை காட்டும் ...
கம்மாயில தண்ணி வந்தா
மனசெல்லாம் அலைஅடிக்கும்
வத்திப்போன ஆத்துக்குள்ள
உன் கால் தடத்த தேடி நெஞ்சு முத்தமிடும் ...
- நாகா

No comments:

neelam enbathu song