Tuesday, September 4, 2018

25-05-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 68 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
25-05-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 68
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
மஞ்சள் கனகாம்பரச்செடி உதிர்த்த நிழலில்
இளைப்பாறியது அந்த எறும்பு ...
இரண்டொரு பூக்கள் சிதறிய
நிலம் எங்கும் இனிப்பின் வாசனை...
அவரைக்கொடியில் ஏறி வழுக்கி விழுந்தது
மாலை சூரியன் ...
விரல் கொய்த பூக்களில்
வேர்களின் விலாசம் ..
மொட்டு அவிழ்ந்த ஒரு
மாழ்கழி மாத காலை நேரம்
நனைத்து போனது துளசி செடியோரம் என்னை ...
பூக்களை புறந்தள்ளும் இலையில்
கசிய ஆரம்பித்தது பற்றிப்படரும் ஈரம் ...
கொல்லைப்புறத்தில் வெயில்காயும்
துளிசியில் முளைக்க ஆரம்பித்தது விண்மீன்கள்...
வாசல் கோலங்களில்
கண்விழிக்கும் பொழுதை பல்லாங்குழிக்குள்
சோழிகளாக இட்டு செல்லும் சில பகல்கள்...
வீட்டின் ஜன்னலுக்கு வெளியில்
சிறுதொட்டியில் இப்போது தான்
குடிவந்திருக்கிறது துளசி செடி ...
அறை முழுதும் நிரம்பும் வாசத்தில்
அது என்னில் இனி பூக்கலாம் ...
- நாகா

No comments:

neelam enbathu song