Tuesday, September 4, 2018

27-03-2017 திங்கள் ஒற்றையடி பாதை : 23 தமிழ் 89.4 பண்பலை வானவில்-லில் நிகழ்ச்சிக்கு நிறைவில் ஒலித்த கவிதை ...


RJ Naga
27-03-2017
திங்கள்
ஒற்றையடி பாதை : 23
தமிழ் 89.4 பண்பலை
வானவில்-லில் நிகழ்ச்சிக்கு நிறைவில் ஒலித்த கவிதை ...
செத்த நேரம் காத்திருந்தா
டவுன்பஸ்ஸு வந்துபுடும்
வக்கணையா ஊரவிட்டு
சொல்லிக்காம ஓடிவிடும் ...
வெள்ளாமை கொடுத்திருந்தா
வயக்காட்டில் படுத்திருப்பேன்
விதையாக காட்டுக்கு
உரமாக போயிருப்பேன் ...
ஆத்துல தண்ணியில்ல
அழுதழுது கண்ணீரும் போதவில்லை
தொண்டை நனைக்க ஒரு
சொட்டு துளிகூட விழவில்லை...
கருப்பு துணிகாட்டி
மழையை தடுத்தேனா...
பருத்தி காட்டுக்குள்
நெருப்பாய் கொடுத்தேனா...
ஏதோ நடந்து போச்சு
ஏகாந்தம் கலைஞ்சு போச்சு
கஞ்சி கலயத்தை
காக்கா தூக்கி போச்சு ...
முற்றத்தில் காயவைக்க
பத்தாயம் நிரம்பவில்லை
உச்சி வேளையில
களத்துமேட்டை காணவில்லை ...
சுவத்துல போஸ்டரை
பிச்சி திங்குது எருமைமாடு
வைக்கோல் கிடைக்காம
அலைபாயுது காளைமாடு ...
புண்ணாக்கு சாப்பிட்டுத்தான்
புலம்பவேண்டி கெடக்கு
உலையிட்ட அரிசி போல
கொதிக்குதுங்க மனசு ...
பட்டுப்போன விவசாயம்
செல்லரிச்சு கிடக்கு
செல்லாத நோட்டைபோல
தரிச்சாச்சு பழசு ...
புதுசா பொறந்தோமுன்னு
தினந்தோறும் நினைக்கறேன்
இருப்பை தொலைச்சிடாம
கண் விழிச்சு கெடக்கறேன் ...
- நாகா.

No comments:

neelam enbathu song