Tuesday, September 4, 2018

22-05-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 65 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
22-05-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 65
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எங்க வீட்டுக்கு பின் பக்கத்தில்
ஆறு ஒன்று இருந்தது ....
மழைக்காலங்களில்
வாசல் வந்து விசாரிக்கும் அது ....
பூவரசம் பூக்கள் மிதக்கும்
அதன் நீரோடையில்
நீந்திப்போகும் நினைவுகள் ஏராளம் ..
மார்கழி மாதம் ஆவி பறக்கும்
அதன் தண்ணீரில் நனைவதுண்டு சில்லென்று ..
உள்ளங்கால் தொட்டு
உச்சந்தலை குளிரும் அதன் ஆரோகணத்தில்
சஞ்சரிக்கும் சகலமும் ....
ஒவ்வொரு ஆண்டும் தவறாமல்
யாரையாவது இழுத்து சென்றுவிடும் ஆற்றில்
ஊடலுடன் மிதப்பேன் சலனமின்றி ...
சிதறும் நிலவை உதிரும் சூரியனை
சுமந்துகொண்டு மிதக்கிறது ஆறுகள்...
ஆறுகளை இடுப்பில் சுமந்த வீடுகள்
இறக்கி விட்டு நடந்து போகிறது
நேற்று அலையடித்த ஆற்றின் சுடும் மணலில்
தனித்து தெரிந்தது அப்பாவின் கால்தடம் .......
- நாகா

No comments:

neelam enbathu song