Tuesday, September 4, 2018

12-03-2017 ஞாயிறு ஒற்றையடி பாதையில்: 10 தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...


RJ Naga
12-03-2017
ஞாயிறு
ஒற்றையடி பாதையில்: 10
தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...
எருக்கஞ்செடி பூத்திருக்கும்
எங்க வீட்டு தோட்டத்துல
எப்போவாச்சும் வழி தவறி
வந்துபோகும் பட்டாம்பூச்சி ..
சாயம் போன பூச்சி ஆனேன் - ஆத்தாடி
பேச்சில்லாம ஊமையானேன் ...
ஒத்தயடி பாதையிலே
வேலியோர ஓணாம்பூவில்
தட்டானை புடிக்க போயி
முள்ளுக்குத்தி நின்னதுண்டு ...
சொல்லுக்காக காத்திருந்தேன் - சிறுக்கிமக
கள்ளத்தனம் தொலைச்சிருந்தேன்
பள்ளிக்கூட பெல்லு சத்தம்
சத்தமா கேட்டபொறவும்
சொமைதூக்கி தலைக்கு வெச்சு
நிழல் மிதிச்சு போனதுண்டு ..
கத்திரி வெயிலுக்கு அப்பப்ப தாகம் - அய்யோ
கத்தரி செடிக்கு காம்பெல்லாம் காயம் ...
நாய்க்கர் வீட்டு எருமக்கண்ணு
மணியக்காரர் பம்பு செட்டு
மிராசுக்காரர் தோப்பு வீடு
குருவி கூடாட்டம் கடந்துபோவேன் ஒத்தையிலே ...
மந்தையில் நின்னு சொல்ல - மவராசிக்கு
மனசுக்குள்ள தெம்பு இல்ல ....
காயவெச்ச புளியபோல
களத்து மேட்டில் காத்திருக்க
கருவாட்டு பானைக்குள்ள
மாட்டிக்கிட்ட பூனை போல ..
அக்கறையா பேசத்தானே -ஆத்தா
ஆகாசத்த பாக்குறேன் நான் ...
புடிக்காத சிநேகம் இப்ப
பிஞ்சுபோன செருப்பாச்சு ..
புளிக்காத பாலு இப்ப
தயிராக நேரமாச்சு ...
வெத்தலையில் மைபோட்டு அவனைத்தான் தேடுறேன்
வெட்கத்தை விட்டுபுட்டு ஒத்தையில வாடுறேன் ...
- நாகா

No comments:

neelam enbathu song