Tuesday, September 4, 2018

08-04-2017 சனிக்கிழமை ஒற்றையடிப்பாதை : 33 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
08-04-2017
சனிக்கிழமை
ஒற்றையடிப்பாதை : 33
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ராஜி என்றொரு ஆட்டுக்குட்டி
என்னை மேய்ப்பதில்
அதிகம் தொலையும்
கண்டுபிடிக்க சொல்லி
துள்ளி குதிக்கும் ....
தொரட்டியில் சிக்காமல்
தழைப்பறிக்கும் அதன்
கூர்மையை தடவி செல்லும்
நேசத்தின் சாணை ...
கழுத்துக்கு மணி
நடக்கிற ஓசையில்
ஒற்றையடி பாதை
பல்லாங்குழி ஆடும் ...
கிடைகளில் அடைபடும் மனதை
சமவெளிகளில்
தேடிப்பார்க்கிறேன் ...
புல் மேயும் அதன்
அதீத பசியில்
என்னை நான் தேடி அடைகிறேன் ...
செம்மண் சாலையும்
புழுதி படிந்த
கனவுகள் சுமக்கும் டவுன் பஸ்
பொழுதுகளும்
மெல்ல படர ஆரம்பிக்கும் ..
ராஜியின் இருப்பு என்னை
மேய்க்க ஆரம்பிக்கும்
ஒரு வனாந்திரம் தொலைத்திருந்த
அதன் அடையாளம்
என்னிடம் இருந்து
கிளம்ப ஆரம்பித்தது ...
ராஜி ஒரு ஆட்டுக்குட்டி
என்னை மேய்க்க
ஆரம்பித்தில் எந்த ஆச்சர்யமும் இல்லை ..
இருந்தும் அது இல்லாத தருணங்களில்
என்னில் மேய ஆரம்பிக்கிறது
அருகம்புல்லாகி கொண்டிருக்கும் நான்
- நாகா

No comments:

neelam enbathu song