RJ Naga
07-05-2017
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 54
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
தொட்டிக்குள் இருக்கும் மீனை
விரல் நீட்டி பிடிக்க எத்தனிக்கும்
குழந்தையின் மனநிலை போல
தொங்கி கொண்டிருக்கிறது தூண்டில் முள்....
ஒருவேளை மீன் கடிக்கலாம்
தொட்டி கவிழ்ந்து தரையில் வழுக்கி
உயிர் போராட்டம் நிகழ்த்த
மீன் தயாராகலாம் ...
ஏதோ ஒன்று நிகழும் என்று தெரிந்தும்
அனுமதிக்கவே செய்கிறது அனைத்தையும் ...
கடல் மறந்த ஞாபக செதில்கள்
குளங்களின் கரைகளில்
பாசி உண்ண ஆரம்பிக்கறது நிதானமாக...
பிடி நழுவி நீந்தும் மீனை
மறுபடியும் பிடிக்க ஆசைப்படும்
மழலையின் சந்தோச சிறகில்
பனி துளியின் கணம் மூழ்கடிக்கிறது ..
தூண்டிலில் சிக்கும் மீன்களில்
இதுவரை மாட்டியதில்லை தங்க மீன்கள்....
விரல் நீட்டி பிடிக்க எத்தனிக்கும்
குழந்தையின் மனநிலை போல
தொங்கி கொண்டிருக்கிறது தூண்டில் முள்....
ஒருவேளை மீன் கடிக்கலாம்
தொட்டி கவிழ்ந்து தரையில் வழுக்கி
உயிர் போராட்டம் நிகழ்த்த
மீன் தயாராகலாம் ...
ஏதோ ஒன்று நிகழும் என்று தெரிந்தும்
அனுமதிக்கவே செய்கிறது அனைத்தையும் ...
கடல் மறந்த ஞாபக செதில்கள்
குளங்களின் கரைகளில்
பாசி உண்ண ஆரம்பிக்கறது நிதானமாக...
பிடி நழுவி நீந்தும் மீனை
மறுபடியும் பிடிக்க ஆசைப்படும்
மழலையின் சந்தோச சிறகில்
பனி துளியின் கணம் மூழ்கடிக்கிறது ..
தூண்டிலில் சிக்கும் மீன்களில்
இதுவரை மாட்டியதில்லை தங்க மீன்கள்....
- நாகா
No comments:
Post a Comment