Tuesday, September 4, 2018

04-05-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 53 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
04-05-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 53
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு சண்டியராக அவனை
அடிக்கடி பார்ப்பதுண்டு ...
விருமாண்டி மீசையில்
ஊஞ்சலாடும் பள்ளத்தூர் சந்தை .....
ஆடுமேய்ந்த மரிக்கொழுந்து போல
வாசம் வீசவே செய்கிறது இப்போதும் ...
திமிரி தொலைந்த திருவிழா மிச்சத்தை
தொட்டுச்செல்கிறது
ஏதோ ஒரு குழந்தை விட்டு சென்ற
விளையாட்டு சாமானை போல அவன் நினைவு ...
கவன குறைவாக நிகழ்ந்துவிடும்
எல்லாவற்றிலும் கவனமாகவே பதிகிறது
அப்பத்தாக்களின் பாம்படங்கள்
கோழி கொத்தும் கம்பங்கதிரை போல....
எல்லைச்சாமிகளை நகலெடுக்காத அவன் சிரிப்பில்
குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்கிறது
தெருவரை வந்த காதல் ..
பின்வாசல் கதவு திறந்து தோட்டம் நுழையும்
அதன் இருப்பின் தாழ் திறக்க ஆரம்பிக்கலாம் கனவு ...
வீடு திருடும் அவசரத்தில்
வீதி கடந்து ஓடுகிறது ஒரு பச்சை குழந்தையாக ...
அதன் ஆசுவாசத்தில் இப்போது
இரை விழுங்கிய மலைப்பாம்பின் பெருமூச்சு..
திண்ணைகளில் காத்திருக்கும்
வெயிலின் விரல் பிடித்து நிதானமாக இப்போது
குடையுடன் அவன் தூரத்தில் வருகிறான்..
- நாகா

No comments:

neelam enbathu song