Tuesday, September 4, 2018

21-05-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 64 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
21-05-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 64
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
பாட்டிக்கு காலெல்லாம்
பித்தவெடிப்பு ...
கையெல்லாம் காப்பு காய்த்த
அடையாளம் ....
சுருங்கின தோலுக்குள்ள
சரம் சரமா ஆசைகள்...
நீளமா மூச்சு வாங்குவா
சந்தையில் வாங்கியாந்த
சாயம் போன புட்டா புடவையில் தான்
இப்போ படுத்து கிடக்கா...
சொந்த உழைப்புல தாத்தா வாங்கின
மச்சு வீட்டுல மோட்டுவளை பார்த்தபடி
அடிக்கடி கண்ணீர் உகுக்குறா...
சீமை கருவேலமரத்தை போல
மண்டி போச்சு அவ வாழ்க்கை ...
வருஷத்துக்கு ஒரு தடவ அப்பாவோட
ஊருக்கு போவோம் ...
தனியாத்தான் இருப்பேன்னு
அத்தனை அடம் பாட்டிக்கு ...
போதாக்குறைக்கு தனியா
சமைச்சு சாப்பிடறது ...
ஒத்த புள்ளைய பெத்தா
உரியில சோறுன்னு சொன்னது தப்பா போச்சு ..
அப்பா எவ்வளவு சொல்லியும் கேக்கல
பாட்டிக்கு பிடிவாதமும் விட்டு போகல..
எருக்கஞ்செடியில கசிகிற தேனாட்டம்
வேர்க்க ஆரம்பிக்குது வாழ்க்கை ...
லீவு நாளா பார்த்து கண்ணமூடினாதான்
பேரபுள்ளைகளும் வந்து பாக்கும் ...
பாட்டியோட சன்னமான குரலில்
ஆதிவிதைநெல்லின் வாசம் ...
உசுர கையில் புடிச்சுகிட்டு எழுந்து நடக்குறா
யாருக்கும் உபத்தரவமா ஆகிடுவோமான்னு
அதீத பயத்துல கதவிடுக்கில் மாட்டுன பல்லியா
உச்சுக்கொட்டி போகுது
பாட்டிக்கும் எங்களுக்குமான உறவு...
- நாகா

No comments:

neelam enbathu song