RJ Naga
08-05-2017
திங்கள்
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 55
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அடம் பிடித்து கிளி ஒண்ணு
வாங்கி வந்தோம் எங்கள் வீட்டுக்கு ...
கம்பிகளால் வேய்ந்த
கூண்டுக்குள் அதன் ஆகாயத்தை
நான்காக எட்டாக பதினாறாக
மடித்து வைத்தாகி விட்டது ...
பேரம் பேசி வாங்கி வந்த கிளி அது
நாக்கு உரித்தால் பேசும்
அதன் மொழியில் நான் பேசவும்
என் மொழியில் அது கதைக்கவும்
பழகிக்கொள்ள வலிகளை முன்வைக்காமல்
உரையாட ஆரம்பித்தோம் ...
என் ஜன்னல்களை திறக்கும்
கிளியின் சிறகு பிடித்து பறக்க ஆரம்பிக்கிறேன்
என் வானம் கிளியின் கால்களில்
வளையங்களாக தொங்கிக்கொண்டிருந்தது ...
கோவைப்பழமும் கொய்யாப்பழமும்
மிளகாய் வத்தலாக காய்ந்து கொண்டிருக்க
கூண்டுக்குள் இருந்து கீச்சிடுகிறது ...
கிளியின் மொழியில் என் வார்த்தைகள்
உதிர்ந்து கொண்டிருப்பதை
நிதானமாக பொறுக்க ஆரம்பிக்கிறேன்
என்னை சுற்றி ஒரு கூண்டு
யாரோ எழுப்ப ஆரம்பிக்கிறார்கள் ...
வாங்கி வந்தோம் எங்கள் வீட்டுக்கு ...
கம்பிகளால் வேய்ந்த
கூண்டுக்குள் அதன் ஆகாயத்தை
நான்காக எட்டாக பதினாறாக
மடித்து வைத்தாகி விட்டது ...
பேரம் பேசி வாங்கி வந்த கிளி அது
நாக்கு உரித்தால் பேசும்
அதன் மொழியில் நான் பேசவும்
என் மொழியில் அது கதைக்கவும்
பழகிக்கொள்ள வலிகளை முன்வைக்காமல்
உரையாட ஆரம்பித்தோம் ...
என் ஜன்னல்களை திறக்கும்
கிளியின் சிறகு பிடித்து பறக்க ஆரம்பிக்கிறேன்
என் வானம் கிளியின் கால்களில்
வளையங்களாக தொங்கிக்கொண்டிருந்தது ...
கோவைப்பழமும் கொய்யாப்பழமும்
மிளகாய் வத்தலாக காய்ந்து கொண்டிருக்க
கூண்டுக்குள் இருந்து கீச்சிடுகிறது ...
கிளியின் மொழியில் என் வார்த்தைகள்
உதிர்ந்து கொண்டிருப்பதை
நிதானமாக பொறுக்க ஆரம்பிக்கிறேன்
என்னை சுற்றி ஒரு கூண்டு
யாரோ எழுப்ப ஆரம்பிக்கிறார்கள் ...
- நாகா
No comments:
Post a Comment