Tuesday, September 4, 2018

08-03-2017 புதன் ஒற்றையடி பாதை : 7 தமிழ் 89.4 பண்பலை இன்று வானவில் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்ட கவிதை ...


RJ Naga
08-03-2017
புதன்
ஒற்றையடி பாதை : 7
தமிழ் 89.4 பண்பலை கிளாசிக் மேட்டணி மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் இன்று வானவில் ஒற்றையடி பாதையில் பகிர்ந்துகொண்ட கவிதை ...
சுள்ளி பொறுக்கும்
சவுக்கு தோப்புக்குள்ள
அரளி பூக்குதுன்னு
யாருமே சொன்னதில்லை ....
நாத்து நடுறப்ப
வரப்புல வானவில்லை
கண்டெடுத்து வந்ததாக
கதை நானும் கேட்டதில்லை ...
சிட்டு குருவிக்கு
ஆகாசம் சீனி மிட்டாய்
சிறகு விரிக்க தான்
தோதில்ல இப்போது ...
பொட்டப்புள்ளையா
பொறந்துப்புட்டேன் பூமியிலே
பூப்பறிக்க ஆசைப்பட்டு
முள்குத்தி தான் தவிச்சேன் ...
அருகம்புல்லைதான்
வெள்ளாடு மேயவரும்
ஒத்த பனித்துளியை
எம்புட்டு நேரம் தாங்கறது ...
சிரபுஞ்சி கண்ணுக்குள்ள
சகாராவோ நெஞ்சுக்குள்ள
உலைகொதிக்கும் சொல்லுக்குள்ள
உசுரு இப்போ விட்டத்தில...
பானையை உருட்டறது
அடுப்போட வேலையாச்சு
பூனையை மிரட்டுறது
எலிகளோட வழக்கமாச்சு ...
முந்தாணை ஓரத்துல
முடிஞ்சு வெச்ச ஆச நூறு
கொசுவத்தை கண்ணீரில்
நீந்தவிட்டு போனதாரு...
எட்டு திசைக்குள்ள
என்ன தேடுறேன்
சுட்டும் விழியால்
பாதை போடுறேன் ...
- நாகா

No comments:

neelam enbathu song