Monday, September 3, 2018

09-07-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 95 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
09-07-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 95
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கை நிறைய வார்த்தைகளுடன்
சந்திக்கிறார்கள் எல்லோரும் ..
அவரவர் முகங்களில்
அடுத்தவர் வார்த்தைகளை சுமந்தபடி ....
சொற்கள் அற்ற வெளியில்
தேவையான சொற்களை வாங்கும்
கூட்டத்தின் வரிசையில்
நிற்க ஆரம்பித்தனர் உதிரி சொற்களை விற்பவர்கள் ...
சொற்களை கொடுத்து சொற்களை
வாங்கும் நேரங்களில்
கொசுறாக கிடைத்தன சில சொற்கள்...
ஒப்பனைகளுடன் வலம்வரும் சொற்கள்
தள்ளுபடி விலையில் மலிவாக கிடைத்தன...
சொற்களின் சுமை மூச்சுவாங்க வைத்தது
எப்போதும் சொற்களை கொத்தி செல்ல
காத்திருக்கும் காகங்களை
விரட்டுவதிலேயே கழிகிறது காலம் ...
சொற்களை சேகரிப்பவனின் பொறுமையில்
அடிக்கடி கல்லெறிந்துபோகிறது
சொற்கள் அற்றவர்களின் மௌனம் ...
சொற்களை உறிஞ்சி வளர ஆரம்பிக்கிறது
எல்லோருக்கும்நாண தனிமை ...
சொற்களை பேசுவதற்கு மட்டும்
பயன்படுத்துவதில்லை இங்கு யாரும் ...
- நாகா

No comments:

neelam enbathu song