Monday, September 3, 2018

29-06-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 90 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
29-06-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 90
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
தவறவிட்ட இரவுநேர கடைசி பேருந்தைப்போல
கடந்து போய்விட்டது எல்லாம் ...
ஒரு சிறுபுள்ளியாக கரைந்து போன
அதன் அகாலத்தில் அமர்ந்துபோகும்
மின்மினியாகிறது நீங்கள் வாசிக்கும் இந்த கவிதை ...
வட்ட சாலையில் திசைத்தேடும்
அதிகபட்ச குழப்பத்தில் தேநீர் பருகும்
அதன் தனிமையில் எங்கிருந்தோ வந்தமர்கிறது
பழக்கப்படாத பாடல் ஒன்று...
அறிந்திராத முகங்களை கடந்து
செல்லவேண்டி இருக்கிறது வெறுமையாக ...
யாரோ யாரையோ அழைக்க
திரும்பி பார்த்து நாமில்லை என்று
ஊர்ஜிதப்படுத்துகிறது இருப்பு...
சாலையை கடக்கும் ஒரு நாய்க்குட்டியின்
பயம் சுமக்க வேண்டி இருக்கிறது
அடுத்த பேருந்து வரும்வரைக்கும் ...
பெயர் தெரியாத ஊரில்
வழிதெரியாமல் சிக்கி கொள்ளும் போது
ஒருவேளை புரியலாம் இந்த கவிதையின் மொழி ...

No comments:

neelam enbathu song