Tuesday, September 4, 2018

01-04-2017 சனிக்கிழமை ஒற்றையடி பாதையில்: 27 தமிழ் 89.4 பண்பலை நமது வானவில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
01-04-2017
சனிக்கிழமை
ஒற்றையடி பாதையில்: 27
தமிழ் 89.4 பண்பலை நமது வானவில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கள்ளிச்செடியில் எழுதி வெச்சேன்
காஞ்சி போயிடுச்சு
தூசுபடிந்த காரின் கதவோ
மழையில் கரைஞ்சிடுச்சு ..
சொல்லப்போனா உதடு கூட
உலர்ந்து போயிடுச்சு ..
என் பேர் மறந்து அவன்பேர் வந்து
ரொம்ப நாளாச்சு ...
நடந்து போற வழியில் தெரியும்
பேர வாசிப்பேன் ...
எச்சில்படாம மனசுக்குள்ள
எழுதி பார்த்துக்குவேன் ...
நூலாம்படையா ஊஞ்சல் ஒண்ணு
நினைவில் கட்டிக்குவேன் ...
அக்கம் பக்கம் பார்க்கும் முன்னே
மெல்ல அசைச்சுக்குவேன் ...
கூட்டாஞ்சோறு ஆக்கும் வயசு
கடந்து வந்துட்டேன் ...
சொப்புச்சாமான்ஆடும் நினைவை
கடத்தி வந்துட்டேன் ...
ஒத்தை மரமா வெட்ட வெளியில்
தனிச்சு நின்னுட்டேன் ..
ஓடக்கரையில் வாடை காற்றா
நனைஞ்சு போயிட்டேன்...
நெருப்பு வச்சு போன பயலை
தேடி காத்திருக்கேன்
நெருஞ்சி முள்ளாய் போனக்கதைய
சொல்ல காத்திருக்கேன் ...
கூடுவிட்டு கூடு பாயும்
வித்தையில் கலைஞ்சிருக்கேன் ...
உசுருக்குள்ள தூண்டில் போட
மொத்தமா சாய்ஞ்சிருக்கேன் ....
- நாகா

No comments:

neelam enbathu song