Monday, September 3, 2018

16-08-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 121 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
16-08-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 121
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு நீல இரவை
கடன்வாங்கி வருகிறது அந்த ராத்திரி...
ஒரு மொட்டைமாடி
நிலாச்சோறு ஞாபகம்
கொஞ்சம் சிதறிய நட்சத்திரங்கள்
இருட்டின் கன்னத்தில் திருஷ்டி பொட்டாக
அம்மாவின் முத்தம் ...
இசையின் நிறம் தேடும் தூரிகை
நடைவண்டியின் சக்கரம் பதிந்த
பாதையில் பயணிக்கும் எறும்பு ...
பூவின் வாசத்திற்கு வசனம் எழுத
ஆரம்பிக்கும் தென்றல் ...
கிழித்தெறிந்த காகித துணுக்கில்
தென்படும் அவள் பெயர் ...
சொல்லி முடிக்கையில்
நிறைவடைந்திருந்தது ஓவியம்
யாவருக்குமான எண்ணங்களை
தனக்கான வண்ணங்களில் நிரப்பியபடி ....
- நாகா

No comments:

neelam enbathu song