Monday, September 3, 2018

17-08-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 122 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
17-08-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 122
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எல்லோரையும் பிடிக்கும் அவனிடம் இருந்து
விலகிச்செல்லவே நினைக்கின்றனர் பலர்...
தன்னை கோமாளியாக்கி கொள்ளும் அவனின் எளிமை
காயப்படும் ஒவ்வொருமுறையும் ...
அதென்னவோ காரணமில்லாமல்
தனிமைப்படுத்தும் தருணங்கள் அதிகமாவதால்
வருத்தங்களில்லை அவனுக்கு ...
கூட்டணிகளின் சாகசங்களில்
வீழ்த்தப்படுகிறது அவனின் சுயம் ...
ரணம் தடவும் வார்த்தைகளை
கடக்க இயலாத நேரங்களில்
கண்ணாமூச்சியாடுகிறது இயலாமை .....
எல்லோருக்குள்ளும் அவன் இருக்கிறான் என்பதை
யாரும் அறிந்திருப்பதில்லை ஒருபோதும் ....
- நாகா

No comments:

neelam enbathu song