Monday, September 3, 2018

20-08-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 123 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
20-08-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 123
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
நடந்த கச்சேரியை நினைத்தபடி
யாரோ ஒருவன்
விட்டுச்சென்ற கைத்தட்டலில்
அதிர்ந்து அடங்குகிறது அரங்கம்...
கதவு திறந்து உள் நுழையும் இசையின் நிழல்
காற்றுவாங்கி கொண்டிருந்தது அங்கு ....
கைரேகை தொலைந்தவனின்முகவரி தேடும்
அவசரம் இல்லாத நொடி
பக்கவாத்யங்களில் மூழ்கி போனது ...
ஒரு சரிகமபதி யின் ஆலாபனை
தொடுக்க ஆரம்பிக்கறது
பார்வையாளர்களின் இசை ஆர்வத்தை ..
உதிர்ந்த ஒரு கைதட்டல்
நிரூபித்துக் கொண்டிருக்கிறது
மலர ஆரம்பித்த இசையின் வாசனையை ...
- நாகா

No comments:

neelam enbathu song