Monday, September 3, 2018

21-08-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 124 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
21-08-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 124
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கொஞ்சம் வெயிலையும் கொஞ்சம் நிழலையும்
நிறுத்தி வைத்திருந்தது அந்த இடம் ...
தாழப்பறக்கும் தட்டான்களை
பிடிக்க கை நீட்டியது பூக்கள்...
பறக்கும் பூக்களை சமாதானப்படுத்தும்
தோட்டத்தின் வேர்கள் ....
வேலிகள் தாண்டி நிழல் விரித்த கிளையில் இருந்து
உதிர ஆரம்பித்தன நட்சத்திரங்கள் ...
ஆகாயம் சுருட்டி கக்கத்தில் வைத்தபடி
படியேறிக்கொண்டிருந்தது நிலா...
வானவில்லின் எட்டாவது நிறம் குறித்த
விவாதத்தில் களைத்து போய்
உறங்கிக்கொண்டிருந்தது மேகம் ...
நதியை உடுத்திக்கொண்ட சலனம் ஏதுமில்லாமல்
பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும்
நாரையின் கால்களை
சுவைத்துக்கொண்டிருந்தது மீன்கள் ...
ஏதோ அந்நியப்பட்டதுபோல்
புரியலாம் உங்களுக்கு ......
இப்படித்தான் எல்லாம் நகர்கிறது
இயல்பாய் இருப்பதுபோல் இயல்பு மாறாமல்...
- நாகா

No comments:

neelam enbathu song