RJ Naga
22-08-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 125
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
மெய்யாலுமே மெர்சலாய்ட்டேன்
மெட்றாஸ்க்கு மொத தபா வந்தப்ப...
ஏர்போர்ட்டை பார்த்தது சென்ட்ரல பார்த்து
அய்யுன்னு கை தட்டினது.....
நைனா வோட சைக்கிள்ல
முன்னாடி உக்காந்துகிட்டு
கெத்தா ஊற சுத்துனது இன்னும் மனசுல
பயாஸ் கோப்பா விரியுது
பிலிம் காட்டாத என்னையும்
புளிப்பு முட்டையாட்டம் பிலிம் காட்ட வைக்குது ...
டூமா கோலியாட்டம்
ஆயாக்கடையில ஆப்பமும்
டோனிராஜாவா பரோட்டாவும் பாயாவும் சாப்பிட்டதும்
காசிமொட்டுல முனியாண்டி விலாசு
பக்கத்துல காத்தாடிவுட்டதும்
டாவு கட்டி ரெட் ரோசு நீட்டினதும்
டவுட்டன்ல மெட்டானி பாத்ததும்
கரண்ட் கம்பில மாட்டிக்கிட்ட காக்காயாட்டம்
கண்ணாபின்னானு எதையெதையோ யோசிச்சாலும்
பண்டிகையில கொடுத்துகிட்ட
புரியாணியும் முட்ட கேக்கும் கேசரியும்
இன்னும் என்ன எங்கேயோ இஸ்துக்கிட்டு ஓடுது ...
ரோட்டுலதான் எல்லாமுமான
வூட்டுல இருந்து வரவனுக்குத்தான் தெரியும்
மழையை ரசிக்கறதா வேணாமான்னு ...
எம்ஜாரு கொடுத்ததா மழையில
மாட்டிட்டு ரிக் ஷா வலிக்கும்
சின்னசாமிக்கு காதுல சொருகி இருக்கும்
காஜா பீடியாட்டம் புகைய ஆரம்பிக்குது மனசு
சென்னை இப்போ ஷோக்கா மாறிபோச்சு
பைய்யன் இப்போ ஷேர் ஆட்டோ ஓட்டுறான்..
மெட்றாஸ்க்கு மொத தபா வந்தப்ப...
ஏர்போர்ட்டை பார்த்தது சென்ட்ரல பார்த்து
அய்யுன்னு கை தட்டினது.....
நைனா வோட சைக்கிள்ல
முன்னாடி உக்காந்துகிட்டு
கெத்தா ஊற சுத்துனது இன்னும் மனசுல
பயாஸ் கோப்பா விரியுது
பிலிம் காட்டாத என்னையும்
புளிப்பு முட்டையாட்டம் பிலிம் காட்ட வைக்குது ...
டூமா கோலியாட்டம்
ஆயாக்கடையில ஆப்பமும்
டோனிராஜாவா பரோட்டாவும் பாயாவும் சாப்பிட்டதும்
காசிமொட்டுல முனியாண்டி விலாசு
பக்கத்துல காத்தாடிவுட்டதும்
டாவு கட்டி ரெட் ரோசு நீட்டினதும்
டவுட்டன்ல மெட்டானி பாத்ததும்
கரண்ட் கம்பில மாட்டிக்கிட்ட காக்காயாட்டம்
கண்ணாபின்னானு எதையெதையோ யோசிச்சாலும்
பண்டிகையில கொடுத்துகிட்ட
புரியாணியும் முட்ட கேக்கும் கேசரியும்
இன்னும் என்ன எங்கேயோ இஸ்துக்கிட்டு ஓடுது ...
ரோட்டுலதான் எல்லாமுமான
வூட்டுல இருந்து வரவனுக்குத்தான் தெரியும்
மழையை ரசிக்கறதா வேணாமான்னு ...
எம்ஜாரு கொடுத்ததா மழையில
மாட்டிட்டு ரிக் ஷா வலிக்கும்
சின்னசாமிக்கு காதுல சொருகி இருக்கும்
காஜா பீடியாட்டம் புகைய ஆரம்பிக்குது மனசு
சென்னை இப்போ ஷோக்கா மாறிபோச்சு
பைய்யன் இப்போ ஷேர் ஆட்டோ ஓட்டுறான்..
- நாகா
No comments:
Post a Comment