Monday, September 3, 2018

23-08-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 126 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
23-08-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 126
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
யாருமில்லா வீட்டில்
உடைந்து விழுகிறது கண்ணாடி ஜன்னல் ...
கை தட்டும் கூட்டத்தில் இருந்து
தனித்து ஒலிக்கிறது
பந்துக்கு சொந்தக்காரனின் மௌனம் ...
உதிர்ந்து விழுந்த இறகை கவனிக்காமல்
பறந்து போகிறது அந்த பறவை ..
தானியம் வைக்க மறந்த
வீட்டின் சமயலறையில்
ஒளிந்திருக்கிறது பசி ...
சில்லுகளான துவாரம் வழியே
உளவு பார்க்கிறது மத்தியான வானம் ...
சொல்லிக்கொள்ளாமல் சென்று விட்ட
குற்றஉணர்வு ஏதுமில்லாமல்
சாளரம் திறக்கும் போது
பார்வையில் படுகிறது
சமையலறை நுழைந்த கிரிக்கெட் பந்து ...
பூட்டிய வீட்டுக்குள் இருந்து
ஆரம்பமாகிறது ஒரு யுத்தம் ...
மைதானத்தில் தொடங்கியிருக்கும் ஆட்டத்தில்
யாரோ ஒரு பையன்
பந்துவீச தொடங்கி இருக்கிறான் ..
ஜன்னல் திறந்து தானியம் வைக்க
வரலாம் ஒருவேளை அந்த பறவை ...
- நாகா

No comments:

neelam enbathu song