Tuesday, September 4, 2018

11-05-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 58 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
11-05-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 58
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஒரு ஆரஞ்சு மிட்டாயில்
ஆரம்பமானது எங்கள் சிநேகம் ...
நீராடும் கடலுத்த பாடி முடிக்கையில்
என் பக்கத்து இருக்கையில் அமர்வான்...
பாதி கடித்த கம்மர்கட்
மார்கழிமாத காலையில்
ஆலமர இலையில் வாங்கிய பொங்கல்
ஜாமென்ட்ரி பாக்சில் வைத்திருந்த
கொடுக்காப்புளி அரை நெல்லிக்காய்..
இவைகளுடன் தான்
பாண்டி ஆடும் எங்கள் பகல் ...
அரைக்கால் சட்டையில் அள்ளிவருவான் நேசத்தை
ஊறவைத்த அரிசியில்
கொஞ்சம் சர்க்கரை கலந்து....
என் பாவாடை சட்டை மேல் பையில்
அவனுக்காக எடுத்து வரும்
எங்கள் வீட்டு புளியங்காய்
இனிக்கவே செய்தது எப்போதும் ....
டோப்பாஸ்- பிளேடால் என் பெயரை அவனும்
காம்பஸ் முனையால் அவன் பெயரை நானும்
எழுத்து பிழைகளுடன் எழுதி முடித்திருந்தோம் ...
ஜனகனமன பாடி முடித்திருந்த
ஒரு அந்தி பொழுதின் பள்ளிக்கூடத்தை
நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது
கட்டுப்பாட்டினை இழந்த
லாரியின் ஞாபகம் ..
புள்ளி வைத்த வாசல் கோலத்தில்
சிதறி விழுந்த புத்தக பக்கத்தில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது
கலாபத்தின் தொகை ஒன்று ....
- நாகா

No comments:

neelam enbathu song