RJ Naga
25-04-2017
செவ்வாய்
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 46
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
திரும்பி பார்த்து
வணக்கம் சொல்லும் காற்றாகிறது மனசு. ..
தோட்டம் கடந்து வந்த பூக்களின்
பனித்துளி ஈரத்தில் நனைந்துபோகிறது நந்தவனம் ...
வேலிகாத்தான் மரத்தில்
தாம்புக்கயிற்றில் ஊஞ்சலாடுகிறது
அணிலாக அசையும் அவன் ஞாபகம் ..
கொத்துக்காய் பறிக்க
கருக்கலில் கிளம்புகையில்
அரவத்தின் அடையாளம் மிதித்து
பிளிறும் மனதை அங்குசம் கொண்டு அடக்க
சிரமப்பட வேண்டிதான் இருக்கிறது ...
கலாபத்தின் உதிர்ந்த இறகைப்போல
கொட்டிச்செல்கிறது வனமெங்கும்
கண்களின் வழியே அவன் முகம் ... ..
உள்ளங்கையில் ஒளிந்து கொண்ட நதிகளை
விரல்களின் வழியே வெளியற்றும்
ஒரு நதிகடத்தும் முயற்சியில்
ஆவியாகிறது அவன் நினைவின் வெப்பம் ...
கீரை பறித்து குழம்பு வைப்பதுபோலில்லை
அவன் ஞாபகத்தை பொத்திவைப்பது...
மாடத்தில் அகல்விளக்காக
திரித்தூண்டி போகும் மின்மினியாகிறது
காதலாய் கசிந்துருகிக்கொண்டிருக்கும்
காதலாய் ஆன ஒன்று .......
வணக்கம் சொல்லும் காற்றாகிறது மனசு. ..
தோட்டம் கடந்து வந்த பூக்களின்
பனித்துளி ஈரத்தில் நனைந்துபோகிறது நந்தவனம் ...
வேலிகாத்தான் மரத்தில்
தாம்புக்கயிற்றில் ஊஞ்சலாடுகிறது
அணிலாக அசையும் அவன் ஞாபகம் ..
கொத்துக்காய் பறிக்க
கருக்கலில் கிளம்புகையில்
அரவத்தின் அடையாளம் மிதித்து
பிளிறும் மனதை அங்குசம் கொண்டு அடக்க
சிரமப்பட வேண்டிதான் இருக்கிறது ...
கலாபத்தின் உதிர்ந்த இறகைப்போல
கொட்டிச்செல்கிறது வனமெங்கும்
கண்களின் வழியே அவன் முகம் ... ..
உள்ளங்கையில் ஒளிந்து கொண்ட நதிகளை
விரல்களின் வழியே வெளியற்றும்
ஒரு நதிகடத்தும் முயற்சியில்
ஆவியாகிறது அவன் நினைவின் வெப்பம் ...
கீரை பறித்து குழம்பு வைப்பதுபோலில்லை
அவன் ஞாபகத்தை பொத்திவைப்பது...
மாடத்தில் அகல்விளக்காக
திரித்தூண்டி போகும் மின்மினியாகிறது
காதலாய் கசிந்துருகிக்கொண்டிருக்கும்
காதலாய் ஆன ஒன்று .......
- நாகா
No comments:
Post a Comment