RJ Naga
27-04-2017
வியாழன்
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 48
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
ஜோடி மாட்டுல ஒத்த மாடு காணல
கரிச காட்டுல பச்ச புல்லு பூக்கல....
விரிசல் சுவரில வேர்விட முடியல
களவு போனத திருப்ப வழியில்ல..
கரிச காட்டுல பச்ச புல்லு பூக்கல....
விரிசல் சுவரில வேர்விட முடியல
களவு போனத திருப்ப வழியில்ல..
ஊமத்தம் பூவாட்டம் முள்ளாச்சு மேனி
உதட்டோரம் கசியுதே சீக்கிரம் வாநீ...
உதட்டோரம் கசியுதே சீக்கிரம் வாநீ...
சூல செங்கல்லு இன்னும் வேகல
சுட்ட பானைக்கு வெப்பம் போதல
ஆல கரும்புக்கு இனிப்பு கூடல
ஆலம் விழுதுக்கு நேரம் சரியில்ல..
சுட்ட பானைக்கு வெப்பம் போதல
ஆல கரும்புக்கு இனிப்பு கூடல
ஆலம் விழுதுக்கு நேரம் சரியில்ல..
மூக்கணாங்கயிருக்கு தோதில்ல அப்ப
வைக்கோல் கன்னுக்கு பாலில்ல இப்ப
வைக்கோல் கன்னுக்கு பாலில்ல இப்ப
ஒத்த பாதையில் பயணம் தொடங்கல
நட்ட நடுவுல சிறகு விரியல
மொட்டுவிட்டத பறிக்க தோணல
காட்டு பூவுக்கு கனவு கிடையில
நட்ட நடுவுல சிறகு விரியல
மொட்டுவிட்டத பறிக்க தோணல
காட்டு பூவுக்கு கனவு கிடையில
பரண்மேல தூங்குது பச்சப்புள்ள வயசு
தூளியை ஆட்டுது சிக்கிக்கிட்ட மனசு ..
தூளியை ஆட்டுது சிக்கிக்கிட்ட மனசு ..
அச்சு வெல்லத்தை எறும்பு திங்கல
ஆலங்கட்டி மழை ஆள நனைக்கல
கெண்டை மீன கொக்கு விரும்பல
குளத்தங்கரையில உள்ளங்கால் நனையல...
ஆலங்கட்டி மழை ஆள நனைக்கல
கெண்டை மீன கொக்கு விரும்பல
குளத்தங்கரையில உள்ளங்கால் நனையல...
அடங்காபிடாரியா திமிரிட்டு திரியறேன்
அடக்க முடியாம விம்மலை மறைக்கிறேன்
அடக்க முடியாம விம்மலை மறைக்கிறேன்
- நாகா
No comments:
Post a Comment