Tuesday, September 4, 2018

26-06-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 87 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
26-06-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 87
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
நீந்தி பறக்கிறது
ஒரு பறவையாக காலம் ..
கொத்திக்கொண்டு காற்றில்
மிதக்கும் அதன் இருப்பு
துரத்துகிறது ஒவ்வொருமுறையும் வெயிலாக ...
நீரில் தெரியும் அதன் நிழல்
வரைந்துசெல்கிறது
நனையாத ஒரு பறவையை ..
பறவையாக அது தென்படாத ஒன்றில் தான்
பறக்க ஆரம்பிக்கிறது சர்வ சுதந்திரத்துடன்...
பறவையை பறவை என்று
நம்பவைக்க வேண்டிய
கட்டாயத்தில் உதிர்கிறது அதன் இறகு ...
ஒரு பறவையின் கூட்டுக்குள்ளிருந்து
அதிகபட்சமாக பறவையை தவிர
வேறொன்று வருவதில்லை ..
பறவைகள் தூக்கி சென்று
கடாசி விட்டு போன நம்மை
தொங்கி கொண்டிருக்கும் கிளைகளில் இருந்து
பத்திரப்படுத்த வேண்டும் ...
ஒரு பறவையை பின்தொடரும்
இன்னொரு பறவை
அதிகமாக கேட்டிருக்காது கேள்விகளை ..
அதிசிறந்த இசையை மீட்டும்
ஏதோ ஒருபறவையின் உதிர்ந்த
இசைத்துண்டில் வந்தமர்கிறது
சில ஆரோகணங்களும் சில அவரோகணங்களும் ...
- நாகா

No comments:

neelam enbathu song